கொழும்பில் உள்ள மூன்று திரையகங்களின் சிற்றுண்டிச்சாலைகளில் நுகர்வோர்
அதிகார சபையினர் சோதனைகளை நடத்தியுள்ளனர்.
நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமான விலையில் பொருட்கள் விற்கப்படுவதாக
கிடைத்த முறைப்பாடுகளை தொடர்ந்தே இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
முறைப்பாடு
இதன்போது, அதிகபட்ச சில்லறை விலையை விட அதிகமான விலையில் பொருட்களை விற்க
வேண்டாம் என்று அனைத்து வணிகர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரசபை
தெரிவித்துள்ளது.
இதேவேளை இதுபோன்ற முறைப்பாடுகள் இருக்குமானால், அலுவலக நேரங்களில் நுகர்வோர்
அதிகாரசபையின் 1977 அவசர எண்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி முறைப்பாடுகளை பதிவு
செய்யுமாறு அதிகாரசபை கோரியுள்ளது.
