Home இலங்கை சமூகம் இலங்கையில் தோல் கிரீம்களை பயன்படுத்துவோருக்கு வெளியான எச்சரிக்கை

இலங்கையில் தோல் கிரீம்களை பயன்படுத்துவோருக்கு வெளியான எச்சரிக்கை

0

இலங்கை சந்தையில் கிடைக்கும் பல தோல் கிரீம்கள் மற்றும் லோஷன்களில் ஆபத்தான அளவில் அதிக அளவு கன உலோகங்கள் இருப்பது ஆய்வக சோதனைகளில் தெரியவந்ததை அடுத்து, நுகர்வோர் விவகார ஆணையம் (CAA)அதனை பயன்படுத்துவோருக்கு ஒரு பொது எச்சரிக்கையை விடுத்துள்ளது.

நுகர்வோர் அதிகாரசபையின் தகவலின்படி, சோதனை செய்யப்பட்ட தயாரிப்புகள் கன உலோகங்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பு வரம்புகளை மீறி, நுகர்வோருக்கு கடுமையான உடல்நல அபாயங்களை ஏற்படுத்துகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

 வெளியானது பட்டியல்

 பாதிக்கப்பட்ட தயாரிப்புகள் மற்றும் அவற்றின் பிராண்ட் பெயர்களின் பட்டியலையும், அனுமதிக்கப்பட்ட உலோக செறிவுகளைக் கோடிட்டுக் காட்டும் வர்த்தமானியின் நகலையும் அதிகாரசபை வெளியிட்டுள்ளது.

 இவற்றை பயன்படுத்த வேண்டாம்

அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பு வரம்புகளை மீறும் கிரீம்கள் மற்றும் லோஷன்களை வாங்கவோ பயன்படுத்தவோ கூடாது என்று நுகர்வோர் கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இந்த தயாரிப்புகளை விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கு எதிராக ஏற்கனவே சட்ட நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது, மேலும் இது தொடர்பில் கடுமையான செயற்பாடு பின்பற்றப்படும் என்று நுகர்வோர் அதிகார சபை( CAA )மேலும் தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version