மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற அசுத்தமான தேங்காய் எண்ணெய் உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க(Wasantha Samarasinghe) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய(05) அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி சபையில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “சில இறக்குமதி நிறுவனங்கள் கணிசமான வருவாய் ஈட்டிய பின்னர் 11 மாதங்களில் செயல்படாமல் போய்விட்டன.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் திருத்தப்படும் என்பதுடன் மோசடிகளைத் தடுக்க வலுவான விதிகள் மற்றும் விதிமுறைகள் கொண்டுவரப்படும்.” என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் மே மாதத்தின் பின்னர் தேங்காய் விலையில் மாற்றம் ஏற்படுமென்று எதிர்பார்ப்பதாக தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
தேங்காய் இறக்குமதி
தேங்காய் மற்றும் தேங்காய் சார் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களை இறக்குமதி செய்யும் நடவடிக்கைகள் எதிர்வரும் சில நாட்களில் ஆரம்பமாகுமென்று தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் சாந்த ரணதுங்க (Shantha Ranatunga) குறிப்பிட்டுள்ளாா்.
அத்துடன், இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் 200 மில்லியன் தேங்காய்களை அறுவடை செய்ய முடியுமென தெங்கு ஆராய்ச்சி நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
மேலும், அறுவடை வீழ்ச்சியால் ஏற்படும் பற்றாக்குறையை நிரப்ப தேங்காய் பால் மா மற்றும் தேங்காய்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
