Home இலங்கை சமூகம் மூன்று கோமாளிகளும் ஒரு பைத்தியமும் – யாழில் சர்ச்சையை கிளப்பிய சுவரொட்டிகள்

மூன்று கோமாளிகளும் ஒரு பைத்தியமும் – யாழில் சர்ச்சையை கிளப்பிய சுவரொட்டிகள்

0

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 06ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் (Local government election)  நடைபெறவுள்ள நிலையில் மக்கள் வாக்களிப்பில் ஆர்வம் காட்டாத நிலை காணப்படுகின்றது.

இந்த நிலையில் யாழ்ப்பாணத்தின் (Jaffna) பல்வேறு பகுதிகளில் தேர்தல் தொடர்பில் சர்ச்சையை ஏற்படுத்தக் கூடிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

பகிரப்படும் சுவரொட்டிகள்

குறித்த சுவரொட்டியில், ”அன்பான வாக்காளர்களே! மூன்று கோமாளிகளும் ஒரு பைத்தியமும் போதும். இனிமேலாவது பொறுப்புடன் வாக்களிப்போம்….யாழ்ப்பாணம் கல்விச் சமூகம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சுவரொட்டிகள் தொடர்பில் பலரும் பல்வேறு சந்தேகங்களை வெளிப்படுத்தி வருவதோடு சமூக ஊடகங்களிலும் இந்த விடயம் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You may like this

NO COMMENTS

Exit mobile version