Home சினிமா இதுவரை கூலி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

இதுவரை கூலி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

0

கூலி

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த திரைப்படம் கூலி. இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நாகார்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன், உபேந்திரா, சத்யராஜ், அமீர் கான் ஆகியோர் நடித்திருந்தனர்.

அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த கூலி கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனாலும் கூட வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

வசூல்

கூலி திரைப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் 16 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் இப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, 16 நாட்களில் உலகளவில் ரூ. 505 கோடி வசூல் செய்துள்ளது கூலி திரைப்படம். இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Source: https://cineulagam.com/article/coolie-movie-box-office-report-1756522736

NO COMMENTS

Exit mobile version