Home இலங்கை சமூகம் சிறுவர்களுக்கு உடல் ரீதியான தண்டனை – பயவுள்ள சட்டம்

சிறுவர்களுக்கு உடல் ரீதியான தண்டனை – பயவுள்ள சட்டம்

0

சிறுவர்களுக்கு உடல் ரீதியான தண்டனை வழங்குவதை தடை செய்யும் சட்டமூலம் மிக விரைவில் நிறைவேற்றப்படும் என அநுர தரப்பு அறிவித்தள்ளது.

குறித்த விடயத்தை நாடாளுமன்றத்தில்  நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார (Harshana Nanayakkara
) தெரிவித்துள்ளார்.

வன்முறையால் பிரச்சினை

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், சமூகத்திற்கு பெண்களின் பங்களிப்பைக் கருத்தில் கொண்டு, விவாதத்திற்கு ஒரு நாள் கொடுத்தால் மட்டும் போதாது, ஒரு வருடம் மட்டும் போதாது.

குழந்தைகளை உடல் ரீதியாக தண்டிப்பது குழந்தைகளின் வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் சட்டமூலம் விரைவில் நிறைவேற்றுவோம்.

வன்முறையால் பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்று குழந்தைகள் நம்பினால், அவர்கள் பெரியவர்களானாலும் அதைத் தொடர்வார்கள் என ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கட்டாயப்படுத்தி காணொளி

இதேவேளை, SK vlog என்ற யூரியூப் சனலில் ஏழை குடும்பங்களுக்கு உதவி செய்யும் காணொளிகளை பதிவேற்றும் நபர் ஒருவர் இளம் பெண்ணொருவரை கட்டாயப்படுத்தி காணொளி எடுக்க முயன்ற சம்பவத்திற்கு பல்வேறு தரப்புகளினால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

குறித்த நபர் சம்பந்தப்பட்ட குடும்பங்களின் காணொளிகளை யூரியூபில் பதிவேற்றி, புலம்பெயர் மக்களிடமிருந்து பெறப்படும் பணத்தின் மூலம் உதவி செய்பவர் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், அண்மையில் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட குடும்பம் ஒன்றின் வீட்டிற்கு சென்று காணொளியொன்றை பதிவு செய்த போது, அங்கிருந்த இளம் பெண்ணொருவர் தன்னை காணொளியில் எடுக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

இதன்போது, கோபமடைந்த யூரியூபர் அந்த இளம் பெண்ணின் மனதை நோகடிக்கும் வகையிலான வார்த்தை பிரயோகங்களுடன் பேசியுள்ளார்.

குறித்த விடயம் சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் மக்களால் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருவதுடன் அரசு இவ்வாறான நடவடிக்கைகளை தடுக்க சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version