Home இலங்கை குற்றம் கொழும்பில் பெண் ஒருவர் கைது

கொழும்பில் பெண் ஒருவர் கைது

0

மட்டக்குளிய, கதிரானவத்தை பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் குழுவிற்கு இந்த பெண் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளது.

கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையில் அந்தப் பெண் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


பெண் கைது

சந்தேக நபரிடமிருந்து 52 கிராம் 850 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், 02 கிலோ 100 கிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

கைது செய்யப்பட்ட சந்தேக நபரான பெண் கொழும்பு-15 இல் வசிக்கும் 44 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்குளிய பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version