தற்போது நடைபெற்று வரும் க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் நிறைவடைவதற்கு முன்னர் மதிப்பீட்டு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.
நாடாளவிய ரீதியில் 2,362 பரீட்சை நிலையங்களில் நேற்று ஆரம்பித்த உயர்தரப் பரீட்சைகளின் இரண்டாம் நாள் இன்றாகும்.
அடுத்த மாதம் 5 ஆம் திகதி வரை பரீட்சை நடைபெற உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயர்தரப் பரீட்சைகள்
இந்த ஆண்டு 246,521 பாடசாலை பரீட்சார்த்திகளும் 94,004 தனியார் பரீட்சார்த்திகளும் பரீட்சைக்குத் தோற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.
