Home இலங்கை சமூகம் யாழ். சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய வைத்தியருக்கு பெரும் நெருக்கடி! நள்ளிரவில் பரபரப்பு காணொளி

யாழ். சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய வைத்தியருக்கு பெரும் நெருக்கடி! நள்ளிரவில் பரபரப்பு காணொளி

0

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் உயர் படிப்புக்காக வெளிநாட்டிற்கு சென்றுள்ள நிலையில், பதில் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் அர்ச்சுனா சுகாதார அமைச்சின் செயலாளரால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த வைத்தியசாலைக்கு வருகை தந்த வைத்தியர் அங்கு இடம்பெற்ற பல்வேறு முறைகேடுகள் மற்றும் பொதுமக்களின் பயன்பாடு இன்றி காணப்பட்ட சுகாதார சேவைகளை உடனடியாக நடைமுறைப்படுத்தும் விதத்தில் செயற்பட்டார்.

குறித்த விடயம் தொடர்பாக சாவகச்சேரி வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகரின் தன்னிலை விளக்கமும், சாவகச்சேரி வைத்தியசாலையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பிலும் காணொளி பதிவுகள் முகநூலில் பதிவேற்றப்பட்டது.

முன்னதாக இவர் இந்த விவகாரம் தொடர்பில் காணொளி ஒன்றை வெளியிட்டிருந்த நிலையில் இன்று நள்ளிரவு சுமார் 2 மணியளவில் மற்றுமொரு காணொளி வெளியிட்டு மேலதிக தகவல்களை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version