Home விளையாட்டு 2024 ஒலிம்பிக் தொடரின் கவுண்டவுன் இன்று முதல் ஆரம்பம்

2024 ஒலிம்பிக் தொடரின் கவுண்டவுன் இன்று முதல் ஆரம்பம்

0

சர்வதேச விளையாட்டு திருவிழா என வர்ணிக்கப்படும் இந்த ஆண்டுக்கான ஒலிம்பிக் தொடரின் கவுண்டவுன் (Countdown) நிகழ்வானது இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக்கின் 33 ஆவது தொடரானது பிரான்ஸ் தலைநகர் பரீஸில் எதிர்வரும் ஜூலை மாதம் 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில், ஃபிஃபாவின் உலகளாவிய கால்பந்து மேம்பாட்டுத் தலைவர் அர்சென் வெங்கரினால் ஒலிம்பிக் தீபம் ஏற்றி வைக்கப்பட்டதோடு 30 நாட்கள் கவுண்ட் டவுன் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் சுடர் ஏற்றல்

ஒலிம்பிக் போட்டி எந்த நாட்டில் நடைபெற்றாலும், கிரேக்கத்தின் தென் பகுதி நகரான ஒலிம்பியாவில் பாரம்பரிய முறையில், நடனம், நாடகம் போன்ற கலைவிழாக்கள் நடத்தி சுடர் ஏற்றப்படும்.

இதன்போது, நீளமான உடையணிந்த வீராங்கனை ஒருவர், ஒளிக்கான கிரேக்கக் கடவுள் அபோலோவிடம் பிரார்த்தனை செய்த பிறகு, நிலத்தில் மண்டியிட்டு சூரிய ஒளியால் ஒலிம்பிக் சுடரை ஏற்றிவைப்பார்.

ஒலிம்பிக் போட்டிகள் 

இந்த சுடரானது உலக நாடுகளை சுற்றி வந்து இறுதியில் போட்டி நடைபெறும் நாட்டை வந்தடையும்.

33ஆவது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இந்த ஆண்டு (2024) ஜூலை 26 ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 11 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இதில் 200 நாடுகளைச் சேர்ந்த 10,500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

NO COMMENTS

Exit mobile version