Home இலங்கை சமூகம் தபால் மூல வாக்குகள் எண்ணும் பணி ஆரம்பம்

தபால் மூல வாக்குகள் எண்ணும் பணி ஆரம்பம்

0

2024 ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவடைந்த நிலையில் தற்போது மாவட்ட ரீதியாக தபால்மூல வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் 9ஆவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் 4 மணியுடன் உத்தியோகபூர்வமாக நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு(election commision) தெரிவித்துள்ளது.

நள்ளிரவு வெளியாகும் முதலாவது முடிவு

அத்துடன், ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முதலாவது முடிவை இன்று நள்ளிரவு வெளியிட முடியும் எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க(Saman Sri Ratnayake) தெரிவித்துள்ளார்.

வாக்களிப்பு நிறைவு

இதேவேளை இன்றுமாலை நான்கு மணியுடன் வாக்களிப்பு நிறைவடைந்த நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் வாக்களிப்பு எண்ணும் நிலையங்களுக்கு எடுத்து செல்லும் பணி ஆரம்பமாகியுள்ளது.

Source: https://ibctamil.com/article/counting-of-postal-ballots-1726921455

NO COMMENTS

Exit mobile version