Home இலங்கை சமூகம் தேசபந்து தென்னகோனுக்கு எதிரான மனு! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

தேசபந்து தென்னகோனுக்கு எதிரான மனு! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

0

தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த இடைக்கால மனுவின் உண்மை நிலையை உறுதிப்படுத்த எதிர்வரும் 13ஆம் திகதி அழைக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபர் என்ற ரீதியில் தாம் கடமையாற்றுவதை தடுக்கும் வகையில் விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடை உத்தரவை நீக்குமாறு கோரி அவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இடைக்கால மனு

கலாநிதி பெல்லன்வில தம்மரதன தேரர் மற்றும் மூன்று தேரர்கள் இந்த இடைக்கால மனுவை சமர்ப்பித்திருந்தனர்.

இந்த இடைக்கால மனு நேற்று(06) யசந்த கோதாகொட, ஜனக் டி சில்வா மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டது.

  

இது தொடர்பான மனுவை எதிர்வரும் 13ம் திகதி விசாரணைக்கு அழைத்து, உண்மை நிலையை சரிபார்க்கும்படி மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.   

NO COMMENTS

Exit mobile version