Home உலகம் இந்திய கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

இந்திய கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

0

முன் விசா இல்லாமல் பார்வையிடக்கூடிய இடங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நாடுகளின் கடவுச்சீட்டுகளை ஹென்லி நிறுவனம் தரவரிசைப்படுத்தியுள்ளது.

சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின் (IATA) தரவுகளின் அடிப்படையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இதில், சிங்கப்பூர் முதலிடம் பெற்றுள்ளதுடன் சிங்கப்பூர் கடவுச்சீட்டை வைத்திருப்பவர்கள், 193 நாடுகளுக்கு விசா இல்லாத அல்லது விசா-ஆன்-அரைவல் அணுகலை அனுபவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கடவுச்சீட்டு 

ஜப்பான் மற்றும் தென் கொரியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளதுடன் அமெரிக்க கடவுச்சீட்டு ஒன்பதாவது இடத்திலிருந்து பத்தாவது இடத்திற்கும், பிரித்தானியாவின் கடவுச்சீட்டு ஐந்தாவது இடத்திலிருந்து ஆறாவது இடத்திற்கும் சரிந்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் 34 இடங்கள் முன்னேறி எட்டாவது இடத்தை பிடித்துள்ளது அதே போல், 85 ஆவது இடத்தில் இருந்த இந்திய கடவுச்சீட்டு 77 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

கடுமையான விதி

இந்திய கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள், 59 நாடுகளுக்கு விசா இல்லாத அல்லது விசா-ஆன்-அரைவல் அணுகலை அனுபவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், ஒவ்வொரு நாட்டிற்கும் விசா இல்லாத நுழைவுக்கு சில விதிகள் உள்ளதுடன் சில நாடுகள் வருபவர்களை சில வாரங்கள் தங்க அனுமதிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சில நாடுகள் கடுமையான விதிகளைக் கொண்டிருக்கலாம் எனவே பயணம் செய்வதற்கு முன் அந்தந்த நாடுகளின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களைப் பார்க்க வேண்டும் என அறிவுருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version