Home இலங்கை சமூகம் ஜூலை படுகொலையின் 42 ஆவது நினைவு நாளை முன்னிட்டு லண்டனில் நீதி கோரி ஆர்ப்பாட்டம்

ஜூலை படுகொலையின் 42 ஆவது நினைவு நாளை முன்னிட்டு லண்டனில் நீதி கோரி ஆர்ப்பாட்டம்

0

ஜூலை கலவரத்தின் 42 ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு லண்டனில்
இனப்படுகொலைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றள்ளது.

தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில்
லண்டனில் உள்ள பாராளுமன்ற சதுக்கத்தில் இன்று (23) மாலை இடம்பெற்றுள்ளது.

ஜூலைப் படுகொலை

இதன்போது, 42 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஜூலைப் படுகொலைக்கு நீதி கோரியும்,
தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கு நீதி கோரியும் கோசங்கள்
எழுப்பப்பட்டதுடன், தமிழ் இன அழிப்பின் நிழற்பட காட்சிப்படுத்தலும்
இடம்பெற்றது.

இதில் புலம்பெயர் தமிழ் செயற்பாட்டாளர்கள் பெருமளவில் கலந்து கொண்டிருந்தனர்.

NO COMMENTS

Exit mobile version