Home இலங்கை குற்றம் போதைப்பொருள் வர்த்தகம்: இளம் தம்பதியினர் அதிரடியாக கைது

போதைப்பொருள் வர்த்தகம்: இளம் தம்பதியினர் அதிரடியாக கைது

0

நீண்டகாலமாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த கணவன், மனைவியை திவுலப்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

திவுலப்பிட்டிய, மரதகஹமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யபடும் போது ஆணின் வசம் 11 கிராம் மற்றும் 980 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், பெண்ணின் வசம் 5,100 மில்லிகிராம் ஐஸ் (Ice) போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

விளக்கமறியல் உத்தரவு

இதனையடுத்து மு்ன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், இவர்கள் இருவரும் நீண்ட காலமாக திவுலப்பிட்டிய, கட்டுவெல்லேகம, துனகஹ, அலுதேபொல, மரதகஹமுல்ல, நெல்லிகஹமுல்ல, நில்பனாகொட, மினுவாங்கொட ஆகிய பிரதேசங்களுக்குப் போதைப்பொருட்களை விநியோகித்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இதற்கமைய, கைது செய்யப்பட்ட ஆண் இன்று (08) மினுவாங்கொட நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட பின்னர், தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான உத்தரவின் பேரில் விசாரிக்கப்படவுள்ளார்.

குறித்த பெண் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version