Home இலங்கை சமூகம் கையூட்டு பெற்ற நீதிமன்ற அதிகாரி சிக்கினார்..!

கையூட்டு பெற்ற நீதிமன்ற அதிகாரி சிக்கினார்..!

0

நிலத்தகராறு வழக்கு தொடர்பாக லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் நீதிமன்ற அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது, லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் நேற்று(06) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பலப்பிட்டிய நீதவான் நீதிமன்ற அதிகாரியான சந்தேக நபர், வழக்கு அறிக்கையின் சான்றளிக்கப்பட்ட நகலை வழங்க ரூ. 5,000 இலஞ்சம் கோரியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணை

அத்துடன், முறைப்பாட்டாளருக்கு எதிராக முதலில் தீர்ப்பளிக்கப்பட்ட வழக்கில் மேல்முறையீடு செய்ய குறித்த நகல் தேவைப்பட்டதாக கூறப்படுகிறது.

இதன்படி, இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

NO COMMENTS

Exit mobile version