விஜயதாச ராஜபக்சவை (Wijeyadasa Rajapakshe) சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக நியமிப்பதையும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகச் செயற்படுவதைத் தடுத்தும் மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராகச் செயற்படுவதற்கும் விதிக்கப்பட்ட தடை உத்தரவை மேலும் நீடிப்பதாக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (11) கொழும்பு (Colombo) மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரிய ஆட்சேபனை
இந்த வழக்கில் உரிய ஆட்சேபனைகளை முன்வைக்க கால அவகாசம் வழங்குமாறு பிரதிவாதி நீதிமன்றத்திடம் கோரியதையடுத்து இந்த தடை உத்தரவை வரும் 25 ஆம் திகதி வரை நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான லசந்த அழகியவண்ணவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Source: https://ibctamil.com/article/court-order-regarding-vijayadasa-rajapaksa-1718085508
