Home முக்கியச் செய்திகள் அர்ச்சுனா எம்.பி உள்ளிட்ட ஐவருக்கு நீதிமன்றம் வழங்கிய கட்டளை

அர்ச்சுனா எம்.பி உள்ளிட்ட ஐவருக்கு நீதிமன்றம் வழங்கிய கட்டளை

0

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தின் போது போராட்டம்
நடத்துவதற்கு தடை விதிக்க கோரி யாழ்ப்பாணம் காவல்துறையினர் நீதிமன்றத்தில்
மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

அநுரகுமார திசாநாயக்க மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்,
பொதுமக்கள் சந்திப்பு என சில நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக எதிர்வரும் 31 ஆம்
திகதி யாழ்ப்பாணத்திற்கு (Jaffna) வருகை தரவுள்ளார்.

அந்த வகையில் ஜனாதிபதியின் வருகையின் போது போராட்டம் நடத்துவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna), வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் உள்ளிட்டவை
அழைப்பு விடுத்திருந்தன.

நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு 

இந்த நிலையில் போராட்டம் நடத்துவதை தடை செய்யக்கோரி காவல்துறையினர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் இன்றைய தினம் (29) மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், வடக்கு மாகாண
வேலையில்லா பட்டதாரிகள் சங்கத் தலைவர், ஆர்ப்பாட்டக் குழுவின் யாழ் மாவட்ட தலைவர், தற்காலிக சுகாதார உத்தியோகத்தர் சங்க தலைவர், குரலற்றவர்களின் குரல் அமைப்பின் தலைவர் ஆகிய ஐவரை நாளைய தினம் (30) நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்புக் கட்டளை அனுப்புவதற்கு யாழ்ப்பாணம் நீதவான்
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் தடை உத்தரவு தொடர்பான மனு மீதான விசாரணை நாளைய தினம் யாழ்ப்பாணம் நீதிவான்
நீதிமன்றத்தில் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.


YOU MAY LIKE THIS


https://www.youtube.com/embed/pamqiGiB3cohttps://www.youtube.com/embed/hbR95vgVEWw

NO COMMENTS

Exit mobile version