Home இலங்கை சமூகம் நாவற்குழியில் காணாமல் ஆக்கப்பட்டோரது வழக்கு – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

நாவற்குழியில் காணாமல் ஆக்கப்பட்டோரது வழக்கு – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

0

கடந்த 1996 ஆம் ஆண்டு நாவற்குழி பகுதியில் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட 22 பேர் தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான வழக்கின் தீர்ப்புக்காக வேறொரு திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் (Jaffna) – நாவற்குழி பகுதியில் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் பிறகு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான குறித்த வழக்கு யாழ். மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு

சம்பவம் நடைபெற்ற பகுதியானது சாவகச்சேரி நீதிமன்றத்தின் நியாயாதிக்க
எல்லைக்குள் உட்படுவதால் குறித்த வழக்கு சாவச்சேரி நீதிமான் நீதிமன்றத்தில்
பாரப்படுத்தப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் குறித்த வழக்கானது தீர்ப்புக்காக இன்றையதினம் திகதியிடப்பட்டது.

இருப்பினும் நீதிவான் இன்றையதினம் விடுமுறையில் இருந்த காரணத்தினால் வருகின்ற
ஆகஸ்ட் மாதம் 28 ஆம் தேதி குறித்த வழக்கு தீர்ப்புக்காக திகதியிடப்பட்டுள்ளது. 

[AER5KZY
]

NO COMMENTS

Exit mobile version