Home இலங்கை கல்வி க.பொ.த உயர்தர பரீட்சையை ஒத்திவைக்க கோரும் மனு – நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

க.பொ.த உயர்தர பரீட்சையை ஒத்திவைக்க கோரும் மனு – நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

0

2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்கக் கோரி ஒரு மாணவர் குழு தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் (23.07.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது வழக்கை மேற்கொண்டு நடத்த அனுமதி மறுத்து, மேல்முறையீட்டு நீதிமன்றம் மனுவை நிராகரித்துள்ளது. 

வழங்கப்பட்ட உத்தரவு

மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதிபதி ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு வழங்கப்பட்டது.

நீதிபதி பெர்னாண்டோவின் ஒப்புதலுடன் நீதிபதி அபேசூரிய இந்த தீர்ப்பை அறிவித்துள்ளார். 

Source: https://tamilwin.com/article/court-rejects-bid-to-postpone-sri-lanka-s-a-l-exam-1784784830

NO COMMENTS

Exit mobile version