Home இலங்கை சமூகம் நாடு முழுவதும் மாதிரி போக்குவரத்து மையங்களை உருவாக்க அமைச்சரவை இணக்கம்

நாடு முழுவதும் மாதிரி போக்குவரத்து மையங்களை உருவாக்க அமைச்சரவை இணக்கம்

0

இலங்கையின் முக்கிய நகரங்களில் மாதிரி போக்குவரத்து மையங்களின் தொடரை
நிறுவுவதற்கு அமைச்சரவை கொள்கையளவில் இணக்கம் அளித்துள்ளது.

பொது போக்குவரத்து அமைப்பின் செயல்திறன் மற்றும் ஒருங்கிணைப்பை
மேம்படுத்துவதற்கான தேசிய முயற்சியின் ஒரு பகுதியாக, இவை அமையவுள்ளன.

இது தொடர்பில், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்
துறையின் செயல் அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த முன்மொழிவு, போக்குவரத்து
மற்றும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் முக்கிய நகரங்களில் போக்குவரத்து
மையங்களை உருவாக்குவதன் மூலம் பேருந்துகள், தொடருந்துகள் மற்றும் டாக்சிகளுக்கு
இடையேயான இணைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அத்துடன் பொது போக்குவரத்து உள்கட்டமைப்பை நவீனமயமாக்குவதற்கான அரசாங்கத்தின்
பரந்த கொள்கையை பின்பற்றி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பணிகள் முன்னெடுப்பு

இதன்படி, கண்டி பல-மாதிரி போக்குவரத்து மையம் – உலக வங்கி நிதியுதவியுடன்
கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

•⁠ அனுராதபுரம் ஒருங்கிணைந்த நகர மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கட்டுமானப்
பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன.

தொடர்ந்து அனுராதபுரம் – சாத்தியக்கூறு ஆய்வு மற்றும் முதற்கட்ட பணிகள்
நிறைவடைந்துள்ளன.

கோட்டை தொடருந்து நிலையம் (கொழும்பு) – கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில்
நகர்ப்புற போக்குவரத்துக்கான கொம்ட்ரான்ஸ் மாஸ்டர் திட்டத்தின் கீழ்
முன்மொழியப்பட்டுள்ளது

•⁠
⁠மொரட்டுவ மற்றும் ராகம – முறையே கொம்ட்ரான்ஸ் திட்டம் மற்றும் ஜப்பான்
சர்வதேச ஒத்துழைப்பு நிறுவன ஆய்வில் அடையாளம் காணப்பட்டுள்ளன.

•⁠ ⁠
கம்பஹா – கொழும்பு புறநகர் தொடருந்து திட்டம் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்
திட்டங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

•⁠ ⁠அத்துடன் கட்டுநாயக்க – விமான நிலைய மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதி.

•⁠மற்றும் அவிசாவளை காலி, குருநாகல்,

களுத்துறை மற்றும் காங்கேசன்துறை – நகர மேம்பாட்டு ஆணையகத் திட்டங்கள் என்பன
அடையாளம் காணப்பட்டுள்ளன.

NO COMMENTS

Exit mobile version