அக்குரேகொடவில் நிகழ்நிலை சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 11 இந்தியர்களை இலங்கையில் இருந்து நாடு கடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
கடுவெல நீதவான் நீதிமன்றம் இன்று(07) அந்தக் குழுவிற்கு தலா ரூ. 100,000 அபராதம் விதித்து நாடு கடத்த உத்தரவிட்டது.
கைது நடவடிக்கை
காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், இந்த வாரம் அக்குரேகொடவில் நடந்த சோதனையின் போது, தலங்கம காவல்துறையினர் மூன்று பெண்கள் உட்பட இந்தியர்களை கைது செய்தனர்.
சமீபத்திய இந்தியா மற்றும் இங்கிலாந்திற்கு இடையிலான தொடரின் போது சந்தேக நபர்கள் நிகழ்நிலை சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்
காவல்துறையினரின் கூற்றுப்படி, சந்தேக நபர்கள் பண சூதாட்டத்தை உள்ளடக்கிய நிகழ்நிலை சூதாட்ட மோசடிகளுக்கு நவீன தொலைப்பேசிகள் மற்றும் கணினிகளைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.
இந்த நிலையில், சோதனையின் போது, அதிகாரிகள் 20 தொலைப்பேசிகள், மூன்று மடிக்கணினிகள் மற்றும் ஒரு மடிக்கணினியையும் பறிமுதல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களில் 25, 26, 27 மற்றும் 29 வயதுடைய ஆண்கள் மற்றும் 22, 30 மற்றும் 43 வயதுடைய பெண்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
