2028 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் (Olympic) போட்டியில் கிரிக்கெட் போட்டியும் இடம் பெறவுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை (International Cricket Council) தெரிவித்துள்ளது.
அதன்படி ஒலிம்பிக்கில் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டியில் 6 அணிகள் (ஆண்கள் மற்றும் பெண்கள் ) பங்கேற்கும் எனப் போட்டியின் அமைப்பாளர்கள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.
ஆண்கள் அணியில் ஒவ்வொரு அணியிலும் 15 வீரர்கள் வீதம் 90 வீரர்கள் குறித்த போட்டியில் பங்கேற்பார்கள்.
பெண்கள் அணியிலும் அதே அடிப்படையில் வீரர்கள் பங்கேற்பார்கள்.
ஒலிம்பிக்கில் கிரிக்கெட்
அதன்படி இலங்கை (Sri Lanka), இந்தியா (India), இங்கிலாந்து (England), அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், நியூசிலாந்து, பங்களாதேஷ் (Bangladesh), ஆப்கானிஸ்தான், சிம்பாப்வே, மற்றும் அயர்லாந்து ஆகிய 12 நாடுகளில், தகுதி சுற்று மூலம் 6 அணிகள் மட்டுமே ஒலிம்பிக் போட்டியில் விளையாடத் தகுதி பெறும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.
மேலும், 128 வருடங்களுக்கு பின்னர் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டிகள் இணைத்துக்கெள்ளப்படவுள்ளன.
1900 ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இறுதியாக கிரிக்கெட் போட்டி நடைபெற்றன.
கடந்த வருடம் ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற நிலையில், 2028ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் அமெரிக்காவின் (United States) லொஸ் ஏஞ்சல்ஸில் (Los Angeles) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
