Home இலங்கை குற்றம் பிரபல மதகுருவின் கணக்கில் பல கோடி ரூபா பணம்: பொலிஸார் அதிர்ச்சித் தகவல்

பிரபல மதகுருவின் கணக்கில் பல கோடி ரூபா பணம்: பொலிஸார் அதிர்ச்சித் தகவல்

0

பிரபல தேவாலயத்தின் பாதிரியாரின் வங்கிக் கணக்கில் இருந்து 33 கோடிக்கும் அதிகமான பணத்தை அண்மையில் கண்டுபிடித்துள்ளதாக கொழும்பு பகுதிக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி நிசாந்த சொய்சா கூறியுள்ளார்.

தென்னிலங்கை தொலைக்காட்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

அவர்
கடந்த காலங்களில் சுட்டுக் கொல்லப்பட்ட கிளப் வசந்தவின் கொலையுடன் தொடர்புபட்டவரின் பணம் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த பணம் ஹெரோயின் விற்பனையில் பெறப்பட்ட பணமாகும். குறித்த மதகுருவின் கணக்கில் தொடர்ச்சியாக வைக்கப்பட்டுள்ளது.

குற்றவியல் விசாரணைகள்

இவ்வாறே கறுப்பு பணங்களை புழக்கத்திற்கு கொண்டு வந்துள்ளனர். அத்தோடு கிப்டோ கரன்சி,உண்டியல் போன்ற வழிகளில் கறுப்பு பணம் வெள்ளையாக்கப்படுகிறது.எந்த வழியில் சென்றாலும் எங்களின் விசாரணைகளில் இருந்து தப்ப முடியாது.

இதுவரை பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றவியல் விசாரணைகள் திணைக்களம் தொடர்ச்சியாக இது தொடர்பில் கண்ணாப்பை மேற்கொண்டு வருகிறது.

2025ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மோசடிகளில் பொருள் ஈட்டியிருந்தால் அவற்றை பறிமுதல் செய்து அரசுக்கு சொந்தமாக்குவதற்கான சட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் இந்த சட்டத்தின் படி நீதிமன்ற உத்தரவை பெற்றும் தொலைபேசிகளை ஊடறுத்து விசாரணைகளை செய்வதற்கான அதிகாரம் கிடைத்துள்ளது என்றார். 

NO COMMENTS

Exit mobile version