Home இலங்கை குற்றம் காதணியை அடகு வைத்த இஷாரா செவ்வந்தி! வெளியாகும் பல தகவல்கள்

காதணியை அடகு வைத்த இஷாரா செவ்வந்தி! வெளியாகும் பல தகவல்கள்

0

கணேமுல்ல சஞ்ஜீவ கொலையின் முக்கிய சூத்திரதாரியான இஷாரா செவ்வந்தி கெஹல்பத்தர பத்மே கைது செய்யப்பட்ட பின்னர் மிக பொருளாதார கஷ்டத்தில் வாழ்ந்த நிலையில் தனது காதணியை அடகு வைத்துள்ளதாக  தெரியவந்துள்ளது.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் கொமோண்டோ சலிந்த,கொமோண்டோ முகாமிலுள்ள பொருளாதார கஷ்டங்களில் வாழும் வீரர்கள் மற்றும் போதைக்கு அடிமையானவர்களை வட்சப் குழு மூலம் தொடர்பை ஏற்படுத்தி துப்பாக்கிதாரிகளாக பயன்படுத்தியுள்ளார்.

 கணேமுல்ல சஞ்ஜீவ கொலை

அவ்வாறு ஒருவரே கணேமுல்ல சஞ்ஜீவ கொலைக்கு பயன்படுத்தப்பட்டவர்.
கெஹல்பத்தர பத்மேவின் வேண்டுகோளுக்கிணங்க செவ்வந்தி, கொமோண்டோ சமிந்துவை இந்த கொலைக்கு பயன்படுத்தியுள்ளார்.

அவரின் நெருக்கமான உறவையும் ஏற்படுத்திக்கொண்டுள்ளார்.இவ்வாறே கொமோண்டே சமிந்துவை தன்வலைக்குள் சிக்க வைத்துள்ளார்.

கணேமுல்ல சஞ்ஜீவ கொலைக்கு செவ்வந்தி ஒரு பணம் வாங்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version