நாட்டின் பாதுகாப்பில் நிச்சயமற்ற நிலை உருவாகியுள்ளது என முன்னாள் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.
நாட்டில் பாதுகாப்பு நிலைமை சீர்கெட்டுள்ளதாகவும், பொலிஸார் கண்காட்சி நடத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
திட்டமிட்ட குற்றச்செயல்
கடந்த 2021ம் ஆண்டில் பிரியந்த ஜயகொடி ஓய்வு பெற்றுக்கொள்ளும் போது குற்றச் செயல்கள் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல் பிரிவிற்கு பொறுப்பாக கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், சில பொலிஸ் அதிகாரிகளின் மனநிலை மற்றும் நடவடிக்கைகள் குறித்து வருத்தமடைவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கிளப் வசந்தவின் படுகொலை தொடர்பிலான சந்தேகநபர் ஒருவரை ஊடகங்களின் முன்னிலையில் விசாரணை நடத்தியமை எந்த வகையிலும் ஏற்புடையத்தல்ல எனவும், அதனை தாம் அனுமதிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.