Home இலங்கை சமூகம் இஸ்ரேலிய தூதுவருக்கும் மனுஷ நாணயக்காரவிற்கும் இடையில் விசேட சந்திப்பு

இஸ்ரேலிய தூதுவருக்கும் மனுஷ நாணயக்காரவிற்கும் இடையில் விசேட சந்திப்பு

0

Courtesy: Ministry of Labour & foreign Emp

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவிற்கும்(Manusha Nanayakkara)இலங்கைக்கான இஸ்ரேலிய தூதுவர் நவோர் கிலோனுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பானது இன்று (04.07.2024) தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் நடைபெற்றுள்ளது.

அசாதாரண நிலை

இதன்போது இலங்கையர்களுக்கான இஸ்ரேலின் வேலை வாய்ப்புகள் மற்றும் தற்போது இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்களின் நிலைமை குறித்து கலந்துரையாடப்பட்டது.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் இஸ்ரேலில் ஏற்பட்ட அசாதாரண நிலை காரணமாக இலங்கையில் இருந்து பயிற்சியற்ற தொழிலாளர்கள் கூட கோரப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டது.

எனினும் இஸ்ரேலுக்குச் சென்ற சில இலங்கையர்களின் நடத்தை மற்றும் முறையற்ற செயற்பாடுகள் காரணமாக ஏற்பட்ட பிரச்சினைகளினால் இஸ்ரேலில் உள்ள விவசாய தொழில் முயற்சியாளர்கள் தற்போது இலங்கை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதில் தயக்கம் காட்டுகின்றனர்.

இஸ்ரேலில் உள்ள சில இலங்கைத் தொழிலாளர்கள் இலங்கைப போராட்டங்களைப் போன்று போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கியதால் இந்த நிலை ஏற்பட்டதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார எடுத்து காட்டினார்.

புதிய தொழிலாளர்கள்

இதற்கான தீர்வாக இஸ்ரேலிய விவசாய தொழில் முயற்சியாளர்களை இலங்கைக்கு வரவழைத்து பொருத்தமான நபர்களை அவர்களுடன் கலந்தாலோசிக்க ஒரு வேலைத்திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.

அடிப்படை ஆவணங்களை கொண்டுள்ளவர்கள் இஸ்ரேலிய முதலிட்டாளர்களால் குழுக்கள் முறை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிலாளர்கள் பரிசீலிக்கப்படுவார்கள் என அமைச்சர் குறிப்பிட்டார்.

தேர்ந்தெடுக்கப்பட்டார் எட்டாயிரம் பணியாளர்கள் அனுப்பப்பட்ட பிறகு புதிய தொழிலாளர்கள் இஸ்ரேலுக்குச் செல்ல வாய்ப்பு கிடைக்கும். விவசாயத் துறையைத் அன்றி கட்டுமானம், தாதியர் பராமரிப்பாளர், ஹோட்டல் போன்றவற்றில் பல வேலை வாய்ப்புகள் உள்ளன.

விவசாயத் துறைக்கு தகுதியற்ற தொழிலாளர்கள், ஆனால் தற்போது இஸ்ரேலுக்குச் செல்ல தகுதியுடையவர்கள் இந்த மற்ற வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு உண்டு.

பொறுப்பற்ற நடத்தை

இஸ்ரேலில் பாரிய அளவிலான கட்டுமானத் திட்டங்களுக்கு தொழிலாளர்கள் தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தற்போது தெரிவு செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு இத்திட்டங்களில் வாய்ப்பு வழங்குவதற்கு உடன்பாடு எட்டப்பட்டது. இதன்படி, இஸ்ரேலில் நெடுஞ்சாலைகள் மற்றும் தொடருந்து பாதைகள் போன்ற பாரிய நிர்மாணங்களில் பணிபுரியும் வாய்ப்பு இலங்கையர்களுக்குக் கிடைக்கும்.

கடந்த காலங்களில் இஸ்ரேலுக்குச் சென்ற சில தொழிலாளர்களின் பொறுப்பற்ற நடத்தை காரணமாக இஸ்ரேலிய வேலைகள் தற்போது நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக அமைச்சர் நாணயக்கார தெரிவித்தார்.

இஸ்ரேலில் பணிக்குச் சென்ற தொழிலாளர்களின் முறைற்ற நடத்தைக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் , தேவைப்பட்டால் அந் தொழிலாளர்களை மீண்டும் இலங்கைக்கு அழைக்கவும் தயங்கமாட்டேன் என அமைச்சர் மேலும் கூறினார்.

NO COMMENTS

Exit mobile version