Home விளையாட்டு வரலாற்றுச் சாதனை படைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ!

வரலாற்றுச் சாதனை படைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ!

0

உலகில் 900 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo
) படைத்துள்ளார்.

போர்த்துக்கலை சேர்ந்த ரொனால்டோ கால்பந்து உலகின் பல சாதனைகளை படைத்துள்ள உலகம் முழுவதும் கவனம் பெற்ற விளையாட்டு வீரர்களில் ஒருவர்.

இவர் தொட முடியாமல் போன படைக்காத சாதனை என்றால் அது உலகக்கோப்பையை கைப்பற்றாமை தான் என விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

வரலாற்றுச் சாதனை

நேஷன்ஸ் லீக் போட்டியில் குரோஷியாவுக்கு எதிராக போர்ச்சுகல் (Portugal ) அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் 34 ஆவது நிமிடத்தில் ரொனால்டோ ஒரு கோலை பதிவு செய்தன் மூலம் கால்பந்து உலகில் 900 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை ரொனால்டோ படைத்துள்ளார்.

இதேவேளை இவருக்கு அடுத்தபடியாக மெஸ்ஸி 838 கோல் அடித்து 2ஆவது இடத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version