Home இலங்கை சமூகம் கிறிஸ்தவ சின்னத்தை தவறாகக் கையாண்டமை : மன்னிப்பு கோரியது கொழும்பு ரோயல் கல்லூரி

கிறிஸ்தவ சின்னத்தை தவறாகக் கையாண்டமை : மன்னிப்பு கோரியது கொழும்பு ரோயல் கல்லூரி

0

புதிய இணைப்பு

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற ரோயல் கல்லூரி சைக்கிள் அணிவகுப்பின் போது, ​​ மாணவர்
ஒருவர், கிறிஸ்தவ சின்னமான மர சிலுவையை தவறாகக் கையாண்டமை தொடர்பில், கொழும்பு
ரோயல் கல்லூரி அதிகாரப்பூர்வ மன்னிப்பு கோரியுள்ளது.

இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள, கல்லூரியின் பதில் முதல்வர்
எல்.டபிள்யூ.கே. சில்வா, இந்தச் செயல் “ரோயல் கல்லூரியால் முற்றிலும்
அங்கீகரிக்கப்படவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பல மதங்களின் நிறுவனமான, தமது கல்லூரியின் மதிப்புகளுக்கு, இது
எதிரானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முதலாம் இணைப்பு

கொழும்பில் உள்ள ஒரு முன்னணி பாடசாலையின் மாணவர்களின் செயல்கள் குறித்து,
இலங்கையின் கத்தோலிக்க திருச்சபை இன்று தங்கள் அதிருப்தியை
வெளிப்படுத்தியுள்ளது.

கிறிஸ்தவர்கள் புனிதமாகக் கருதும் சிலுவையை அவமதிக்கும் வகையில் அந்த செயல்
அமைந்திருந்ததாக திருச்சபை குற்றம் சுமத்தியுள்ளது.

இலங்கையின் கத்தோலிக்க திருச்சபை மற்றும் கொழும்பு மறைமாவட்டம், கத்தோலிக்க
பாடசாலைகளின் பொது மேலாளர்-அருட் தந்தை கெமுனு டயஸ், இது தொடர்பில்,
சம்பந்தப்பட்ட பாடசாலையின் அதிபருக்கு எழுதிய கடிதத்தில், தனது அதிருப்தியை
வெளிப்படுத்தியுள்ளார்.

அதிருப்தி

“உங்கள் பாடசாலையின் மாணவர்கள், சிலுவையை சுமந்து சென்று, அதற்கு அவமானம்
விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதை அறிந்தோம்.

இலங்கையில் உள்ள முழு கத்தோலிக்க ஆயர் மாநாட்டினர், அனைத்து பாதிரியார்கள்
மற்றும் கன்னியாஸ்திரிகள் இந்தச் செயலால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

யாரும் எந்த மதத்தையும் அவமதிக்கக்கூடாது என்று நாங்கள் நம்புகிறோம் உங்கள் பாடசாலையும் கிறிஸ்துவை நம்பிய ஒரு கிறிஸ்தவ பாதிரியாரால்
நிறுவப்பட்டது என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்,” என்று அருட்தந்தை
டயஸ் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version