Home இலங்கை பொருளாதாரம் உலக சந்தையில் 6 சதவீதமாக உயர்ந்த கச்சா எண்ணெய் விலை

உலக சந்தையில் 6 சதவீதமாக உயர்ந்த கச்சா எண்ணெய் விலை

0

ஈரானுடன் அமலில் இருந்த போர் நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்ததைத் தொடர்ந்து, உலக சந்தையில் இன்று (08) கச்சா எண்ணெய் விலை சுமார் 6 சதவீதம் உயர்வடைந்துள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் போர் பதற்றம் அதிகரிக்கக்கூடும் என்பதோடு, எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சமும் நிலவுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, பிரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் விலை 5.95 சதவீதம் உயர்ந்து, ஒரு பீப்பாய் 78.50 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

ட்ரம்பின் அறிவிப்பு 

அதேவேளை, அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) கச்சா எண்ணெய் விலையும் 5.95 சதவீதம் உயர்ந்து, ஒரு பீப்பாய் 74.60 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை தொடர அமெரிக்க ஜனாதிபதி அனுமதி அளித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில் இந்த அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

துருக்கியின் அங்காராவில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டின் போது, ​​அவர் இன்று (08) இந்த அறிக்கையை வெளியிட்டார்.

அமெரிக்கப் பிரதிநிதிகள் ஈரானுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றாலும், அது வெற்றிகரமான முடிவைத் தருமா என்பதில் தமக்கு சந்தேகம் இருப்பதாக ட்ரம்ப் மேலும் கூறியுள்ளார்.

“அவர்கள் கலந்துரையாடலாம் , ஆனால் அவர்கள் தங்கள் நேரத்தை வீணடிக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்,” என ட்ரம்ப் மேலும் கூறியுள்ளார்.

Source: https://ibctamil.com/article/crude-oil-prices-rise-1783504166

NO COMMENTS

Exit mobile version