Home இலங்கை குற்றம் யாழ். சுழிபுரம் பகுதியில் கசிப்புடன் இருவர் கைது

யாழ். சுழிபுரம் பகுதியில் கசிப்புடன் இருவர் கைது

0

யாழ்ப்பாணம் – சுழிபுரம் பெரியபுலோ பகுதியில் இரண்டு போத்தல்கள் கசிப்புடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் நேற்றையதினம் (23.10.2024) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வட்டுக்கோட்டை பொலிஸார் முன்னெடுத்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, ஒரே
பிரதேசத்தை சேர்ந்த இருவர் தலா ஒரு போத்தல் கசிப்புடன் கைது
செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகள்

இந்நிலையில், மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்கள் இருவரையும் மல்லாகம் நீதிமன்றத்தில்
முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://tamilwin.com/article/two-arrested-with-illegal-liquor-in-jaffna-1729730401

NO COMMENTS

Exit mobile version