Home இலங்கை சமூகம் ஊரடங்குச் சட்ட காலம் தொடர்பில் பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு

ஊரடங்குச் சட்ட காலம் தொடர்பில் பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு

0

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் கொழும்பு விமானநிலையத்திற்கு செல்லவேண்டிய நிலையில் உள்ள பயணிகள் தங்களின் பயண திட்ட ஆவணத்தை ஊரடங்கு வேளையில் பயணிப்பதற்கான அனுமதிப்பத்திரமாக பயன்படுத்தலாம்.

பொலிஸ்  ஊடக பிரிவு இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

 பயணம் செய்வதற்கான அனுமதிப்பத்திரம்

இதேவேளை வெளிநாடுகளில் இருந்து கொழும்பு விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் தங்கள் போர்டிங் பாஸ்களை ஊரடங்கு வேளையில் பயணம் செய்வதற்கான அனுமதிப்பத்திரமாக பயன்படுத்தலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்கின்ற தரப்பினர் தங்களது நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ள ஆவணத்தை அல்லது கடிதத்தை ஊரடங்கு கால பிரவேச ஆவணமாக பயன்படுத்த முடியும் எனவும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் இன்று இரவு 10 மணியில் இருந்து நாளை காலை 06 மணிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

NO COMMENTS

Exit mobile version