Home இலங்கை சமூகம் முல்லைத்தீவு பாடசாலையில் நிதி முறைகேடு: இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தலையீடு

முல்லைத்தீவு பாடசாலையில் நிதி முறைகேடு: இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தலையீடு

0

முல்லைத்தீவு (Mullativitu) விசுவமடு பிரதேச பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற மணிவிழா மோசடி
தொடர்பில் உரிய விசாரணையை மேற்கொள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

ஏற்கனவே குறித்த முறைகேடுகள் தொடர்பில் பலமுறைப்பாடுகள் உரிய திணைக்களங்களுக்கு அனுப்பப்பட்டும் குறித்த தரப்பினர்களினால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாமல் இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் முன்னணி சமூக ஊடகங்களிலும் அச்சு ஊடகங்களிலும் பேசப்பட்டு வந்த நிலையிலும் முல்லைத்தீவு வலயக்கல்விப் பணிமனையும் வடமாகாண கல்வி திணைக்களமும் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளது.  

வலயக்கல்விப் பணிமனை

இந்தநிலையில், குறித்த முறைகேடு தொடர்பில் உரிய விசாரணை மேற்கொள்ளுமாறு இலங்கை இலஞ்சம் உழல்களுக்கு எதிரான முறைப்பாடு ஆணைக்குழுவிடம் (Commission to Investigate Allegations of Bribery or Corruption) முறையிடப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, வட மாகாண கல்வித் திணைக்களத்தை உரிய முறையில் விசாரணை மேற்கொண்டு
தமக்கு அறிக்கை அனுப்புமாறு ஆணைக்குழு எழுத்து மூலம் கடிதம் அனுப்பியுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version