இலங்கை சுங்கத்தினால் இந்த ஆண்டுக்குள் ஈட்டவேண்டிய வருமான இலக்கை நேற்றைய (11) தினத்துடன் கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து இலங்கை சுங்கம் (Sri Lanka Customs) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த வியடத்தினை அறிவித்துள்ளது.
அதன்படி, 2025 ஆம் ஆண்டுக்கான வருமான இலக்காக 2,115 பில்லியன் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
அதிகபட்ச வருமானம்
இந்த நிலையில் நேற்றைய தினம் வரை 2,117.2 பில்லியன் ரூபாய் என்ற எல்லையை எட்ட முடிந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இதேவேளை சுங்கத் திணைக்களத்தின் வரலாற்றில் ஒரே நாளில் ஈட்டப்பட்ட அதிகபட்ச வருமானமாக 27.7 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.
இந்த சாதனை கடந்த ஆறாம் திகதி வியாழக்கிழமை நிகழ்த்தப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்கள பணிப்பாளர் சந்தன புஞ்சிஹேவா தெரிவித்தார்.
இதற்கு முன்னர் சுங்கத்திணைக்கள அதிக பட்ச வருமானமாக 24 பில்லியன் ரூபா கடந்த மாதம் 15ஆம் திகதி பதிவாகியிருந்தது.
இந்நிலையிலேயே, இச்சாதனையை முறியடிக்கும் வகையில்,கடந்த 06 ஆம் திகதி,சுங்கத் திணைக்களத்துக்கு 27.7 பில்லியன் ரூபா வருமானமாக கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
