Home இலங்கை அரசியல் டக்ளஸ் தேவானந்தாவை நள்ளிரவில் அழைத்த சீ.வி.கே! பரபரப்பாகும் அரசியல்

டக்ளஸ் தேவானந்தாவை நள்ளிரவில் அழைத்த சீ.வி.கே! பரபரப்பாகும் அரசியல்

0

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்க கூட்டணியமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த வருமாறு இலங்கை தமிழரசு கட்சி உத்தியோகபூர்வமாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் (ஈ.பி.டி.பி) கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் இந்த கோரிக்கையை, ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம் விடுத்துள்ளார்.

 உத்தியோகபூர்வ அறிவிப்பு 

நேற்று (03.06.2025) இரவு 11.52 மணிக்கு சீ.வீ.கே.சிவஞானம் தனது தொலைபேசியின் குறுஞ்செய்தி (SMS) வழியாக இந்த வேண்டுகோளை விடுத்ததாக, ஈ.பி.டி.பி செயலாளர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நேற்று (3) இரவு யாழ்ப்பாணத்தை சேர்ந்த பத்திரிகையாளர் வித்தியாதரன் தன்னை தொடர்பு கொண்டு இலங்கை தமிழரசு கட்சி உள்ளூராட்சி அதிகாரத்தை கைப்பற்ற ஆதரவளிக்குமாறு கேட்டார்.

இதன்போது, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சித்தார்த்தன் மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் சுன்னாகம் பிரதேசசபையில் ஆதரவளிக்குமாறு கோரியதாக தெரிவித்தேன் என டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார். 

தமிழரசுக்கட்சி EPDP யுடன் இணைவதற்கு வாய்ப்புகள் அதிகம் என தேர்தல் முடிந்தவுடன் (07.05.2025) மற்றும் நேற்று முன்தினம் செய்திகளுக்கு அப்பால் நிகழ்சியில் சிரேஷ்ட ஊடகவியலாளர் தமிழரசு சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version