அண்மையில் இலங்கையில் இடம்பெற்ற பேரனர்த்த சூழ்நிலை காரணமாக இலங்கை மின்சார சபைக்கு (CEB) பெருமளவு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, மின்சார சபை கிட்டத்தட்ட 20 பில்லியன் ரூபாய் இழப்பைச் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், தடைபட்ட மின்சார விநியோகத்தில் 99 சதவீதம் இப்போது மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக சபையின் பிரதி பொது முகாமையாளர் நோயல் பிரியந்தா (Noel Priyantha) தெரிவித்துள்ளார்.
மின் தடைகள் பதிவு
அனர்த்தத்தின் விளைவாக பல மின்சார நுகர்வோர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
அத்துடன் சேதமடைந்த அனைத்து மின்மாற்றி அமைப்புகளும் தற்போது முழுமையாக மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இந்தநிலையில் பேரனர்த்தம் காரணமாக நாடு முழுவதும் கிட்டத்தட்ட 4.1 மில்லியன் மின் தடைகள் பதிவானதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
