Home இலங்கை சமூகம் தொடர் மாற்றத்துக்குள்ளாகும் தங்க விலை

தொடர் மாற்றத்துக்குள்ளாகும் தங்க விலை

0

இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

கடந்த சில நாட்களாக படிப்படியாக உயர்வடைந்த தங்க விலை இன்று (22.11.2024) மீண்டும் அதிகரித்துள்ளது.

இன்றைய (22.11.2024) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 781,977 ரூபாவாக காணப்படுகின்றது.

விலை நிலவரம் 

24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 27,590 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) 216,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 25,300 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன்  22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 202,350 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 24,150 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 193,150 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செட்டியார் தெரு விபரங்கள்

அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) ஒன்று 213,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை, அங்கு 22 கரட் தங்கப் பவுண் ஒன்று (22 karat gold 8 grams) 196,000 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Source: https://ibctamil.com/article/daily-gold-price-rate-in-srilanka-and-world-market-1732254695

NO COMMENTS

Exit mobile version