Home இலங்கை சமூகம் பால் மாடு இறக்குமதியில் மோசடி! சிக்கப்போகும் முன்னாள் ஜனாதிபதிகள்

பால் மாடு இறக்குமதியில் மோசடி! சிக்கப்போகும் முன்னாள் ஜனாதிபதிகள்

0

இலங்கைக்கு பால் மாடுகளை இறக்குமதி செய்யும் விவகாரத்தில் பாரிய மோசடிகளை மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த, மைத்திரி மற்றும் ரணில் ஆகியோர் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் அதிகாரத்தில் இருந்த முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் காலத்தில் பால் மாடுகளை இறக்குமதி செய்யும் போர்வையில் வயதான பசுக்கள் இறக்குமதி செய்யப்பட்டிருந்தன.

இதன் மூலம் அரசாங்கத்துக்கு 110 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

மோசடி

அந்தக் காலகட்டங்களில் அதிகாரத்தில் இருந்த முன்னாள் ஜனாதிபதிகள் மாத்திரமன்றி அவர்களின் பல முக்கிய அமைச்சர்களும் இந்த மோசடியில் தொடர்பு இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிஹால் கலப்பத்தி குற்றம் சாட்டியுள்ளார்.

அதன் காரணமாக முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த, மைத்திரி, ரணில் மாத்திரமன்றி அவர்களின் காலத்தில் இந்த மோசடியில் தொடர்புபட்ட பசில் ராஜபக்ச, ஹரிசன், விஜித் விஜிதமுனி டி சொய்சா, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் லக்ஷ்மன் வசந்த பெரேரா ஆகியோரும் இந்த விவகாரத்தில் விரைவில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version