Home இலங்கை குற்றம் தலவத்துகொடவில் துப்பாக்கிச் சூடு

தலவத்துகொடவில் துப்பாக்கிச் சூடு

0

தலவத்துகொட பகுதியில் இன்று காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த பகுதியில் அமைந்துள்ள இரவு விடுதி ஒன்றின் முன்பாக இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளது. 

மேலதிக விசாரணை 

இரு குழுக்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியதையடுத்து, இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உரிமம் பெற்ற துப்பாக்கியை வைத்திருந்த துப்பாக்கிதாரி எதிர்த்தரப்பினரை அச்சுறுத்தும் நோக்கில் சுவரின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். 

இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

 

NO COMMENTS

Exit mobile version