Home இலங்கை குற்றம் யாழில் நடு இரவில் வீட்டுக்குள் புகுந்த வன்முறைக் குழுவினரின் அட்டகாசம்

யாழில் நடு இரவில் வீட்டுக்குள் புகுந்த வன்முறைக் குழுவினரின் அட்டகாசம்

0

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த  பொருட்களை தாக்கி சேதப்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று இரவு(21/12/2025) இடம்பெற்றுள்ளது. 

இரவில் நடந்த கொடூரம்

சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது,

கைக்குழந்தைகளுடன் வீட்டில் தங்கி இருந்த குடும்பத்தினர் மீது கொலைவெறி
தாக்குதல் மேற்கொள்ளும் முயற்சியில் வாள்கள், கத்தி, கற்களுடன் வந்த குழுவினர், வீட்டிலுள்ள உழவியந்திரம், வாகனம், வீட்டின்
பொருட்கள் மற்றும் கதவுகளை  சேதப்படுத்தியுள்ளனர்.

மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கட்டைக்காடு கிழக்கு பகுதியில் மதுபோதையில் நீண்ட
நாட்களாக குடும்பங்களை அச்சுறுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக விசாரணை

பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு
செய்துள்ளார்.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிசார் ஆரம்பித்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய பலருக்கு எதிராக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில்
அதிகளவான முறைப்பாடுகள் காணப்படுகின்றன. ஆனாலும் பொலிஸார் அவர்களை கைது செய்ய
தயங்குவதாக பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version