தம்புள்ள ராஜமஹா விகாரைக்கு சொந்தமான காணிகள், அபிவிருத்தி என்ற பெயரில் கொள்ளையிடப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தின் தலையீட்டில் இவ்வாறு கொள்ளை இடப்படுவதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
விகாரையின் பொறுப்பாளராக செயல்பட்டு வரும் தண்டுபந்திருப்பே மஹிந்த தேரர் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தி அவர் இந்த தகவல்களை அம்பலப்படுத்தி உள்ளார்.
தம்புள்ள விகாரைக்கு சொந்தமான காணிகள் முதலில் தம்புள்ள நகரின் அபிவிருத்திக்காக கையளிக்கப்பட்டதாகவும் தற்பொழுது அந்த காணிகள் குத்தகைக்கு விடப்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்தக் காணிகள் ஜனாதிபதி அலுவலகத்தின் ஊடாக குத்தகைக்கு விடப்படுவதாக குத்தகைதாரர்கள் தெரிவிக்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான செயற்பாடுகள் ஜனாதிபதி செயலகத்தினால் மேற்கொள்ளப்படக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு செய்யப்பட்டால் காணிகளை குத்தகைக்கு விடும் அந்த நபர் யார் என்பதை அம்பலப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
நகர அபிவிருத்தி சபை இவ்வாறான குத்தகைக்கு விடும் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது எனவும் அதற்கான உரிமை கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த காரணிகள் தம்புள்ளை நகர அபிவிருத்திக்காக வழங்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் அபிவிருத்தி என்ற பெயரில் விகாரையை சுற்றி இருக்கும் காரணிகளை வேறும் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த காணி அபகரிப்பு நடவடிக்கைகள் உடன் நிறுத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமான முறையில் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள காரணிகள் உடனடியாக மீட்டெடுக்கப்பட வேண்டும் என தம்புள்ள ராஜ மகா விகாரையின் மஹிந்த தேரர் தெரிவித்துள்ளார்.
