Home இலங்கை குற்றம் கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தில் ஏற்பட்ட பதற்றம் – ஆயுதாரிகள் துப்பாக்கி சூடு

கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தில் ஏற்பட்ட பதற்றம் – ஆயுதாரிகள் துப்பாக்கி சூடு

0

புத்தளத்தில் இருந்து கொழும்பு நோக்கி நேற்று சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றில் ஆயுததாரிகள் ஏறியமையால் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

பேருந்து பயணத்துக் கொண்டிருந்த போது, ஆயுததாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் காயமடைந்த நடத்துனர் மாரவில ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாரவில – கொடவெல சந்தி பகுதியில் ஆயுதங்களுடன் பேருந்தில் ஏறிய சிலர் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை

மேலதிக விசாரணை

தாக்குதலில் காயமடைந்த நடத்துனர் நசுர்தீன் மொஹமட் நசுர்தீன் என்பவராகும். அவர் அனுராதபுரம், பரசங்கஸ்கதேவ பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 24 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாரவில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் திட்டம்! அதிகாரிகளின் மோசமான செயல்

NO COMMENTS

Exit mobile version