Home இலங்கை சமூகம் கொள்கலன்கள் விடுவிப்பு தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

கொள்கலன்கள் விடுவிப்பு தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

0

தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டிய கொள்கலன்கள் பல எவ்வித சோதனையும் இன்றி விடுவிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டியவை என சிவப்பு லேபர் அடையாளம் இடப்பட்ட பெருந்தொகை கொள்கலன்கள் இவ்வாறு பரிசோதனை செய்யாது விடுவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்க அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் அமில சஞ்சய இந்த குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

323 கொள்கலன்கள்

சுமார் 323 கொள்கலன்கள் சோதனை எதுவும் நடத்தப்படாது விடுவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு விடுவிக்கப்பட்ட கொள்கலன்களில் 80 வீதமானவை கடும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டிய கொள்கலன்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கொள்கலன்களை விடுவிப்பதற்கு எவருக்கும் அதிகாரம் கிடையாது எனவும் சட்டத்தில் இடமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

நடவடிக்கைக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில்…

இந்த கொள்கலன்களில் ஆயுதங்கள், போதைப்பொருட்கள், தரம் குறைந்த மருந்து வகைகள் அல்லது வேறும் எந்த சட்டவிரோதப் பொருட்களும் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

குறித்த கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட சம்பவத்திற்கும் சுங்க அதிகாரிகளுக்கும் தொடர்பு கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சுங்க ஆணையாளர் நாயகம் அறிந்திருந்தார் என குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் சுங்க அதிகாரிகள் நேற்றைய தினம் பணியில் இருந்து விலகி இருந்தனர் எனவும் அமல் சஞ்சீவ மேலும் தெரிவித்துள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version