Home இலங்கை குற்றம் வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட பொதியில் சிக்கிய ஆபத்தான பொருள்

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட பொதியில் சிக்கிய ஆபத்தான பொருள்

0

தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு தபாலில் அனுப்பப்பட்ட போதைப்பொருள் பொதியொன்று கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு தபாலில் அனுப்பப்பட்ட  போதைப்பொருளின் பெறுமதி 60 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் எனவும், போதைப்பொருளின் மொத்த எடை 6 கிலோ கிராம் 201 கிராம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

விசேட சோதனை நடவடிக்கை

இந்த போதைப் பொருட்கள் தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு தபாலில் அனுப்பப்பட்டவைகள் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக தெமட்டகொடையை சேர்ந்த 31 வயது சந்தேகநபர் ஒருவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களப் பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

விசேட சோதனை நடவடிக்கையின் போதே போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை, ஒருகொடவத்தை சுங்க முனையத்தில் பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்ட கொள்கலன் ஒன்றில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகுதி மஞ்சள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version