வாகனத்தில் வினோதம் காட்டுவது குறித்து இலங்கை பொலிஸ் திணைக்களம் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
நண்பர்கள் குழு ஒன்று ஓடும் வாகனத்தின் வெளி முகப்பில்( Bonnet )ஒருவரை ஏற்றி வினோதம் செய்யும் காணொளி ஒன்று அதிகமாக பகிரப்பட்டதை அடுத்து, இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சட்ட நடவடிக்கை
இதுபோன்ற ஆபத்தான பொழுதுபோக்கு செயல்கள் உங்கள் உயிருக்கும் மற்றவர்களின் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கும் என்று பொலிஸ் திணைக்களம தெரிவித்துள்ளது.
எனவே, உயிருக்கு ஆபத்தான நடத்தைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
அதேநேரம், போக்குவரத்து பாதுகாப்பு விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.