Home இலங்கை சமூகம் சவுதியிடமிருந்து இலங்கைக்கு கிடைத்துள்ள நன்கொடை

சவுதியிடமிருந்து இலங்கைக்கு கிடைத்துள்ள நன்கொடை

0

சவுதி அரேபியா 50 மெட்ரிக் தொன் பேரீச்சம் பழங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.

எதிர்வரும் ரமழான் நோன்பு காலத்தை முன்னிட்டு இவ்வாறு பேரீச்சம் பழங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பேரீச்சம் பழங்கள் நாட்டுக்கு கிடைத்துள்ளதாகவும் அவற்றை பள்ளிவாசல்களுக்கு விநியோகிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் கூறியுள்ளார்.

ரமழான் மாதம்

ரமழான் மாதம் இஸ்லாமிய நாள்காட்டியில் புனித மாதங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இந்த மாதம் முகமது நபிக்கு குர்ஆன் வெளிப்படுத்தப்பட்டதை குறிப்பதுடன் தமது பாவங்களில் இருந்து காக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையுடன் முஸ்லிம் மக்கள் இந்த நோன்பை கடைபிடிக்கின்றனர்.

ரமழான் நோன்பு கடைபிடிப்பவர்கள் அதிகாலை முதல் மாலை வரையில், உண்ணாமல், நீரருந்தாமல் நோன்பு பிடிப்பார்கள்,இவ்வாறான நோன்பு காலங்களில் பேரீச்சம் பழங்கள் முக்கியமான ஒரு உணவு பொருளாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

NO COMMENTS

Exit mobile version