Home இலங்கை சமூகம் பல்வேறு துறைகளில் இலங்கைக்கு உதவுவதாக நியூசிலாந்து உறுதி

பல்வேறு துறைகளில் இலங்கைக்கு உதவுவதாக நியூசிலாந்து உறுதி

0

பல்வேறு துறைகளில் இலங்கைக்கு உதவுவதாக நியூசிலாந்து உறுதியளித்துள்ளது.

உணவுப் பாதுகாப்பு, மருத்துவ விஞ்ஞான ஆய்வு, விளையாட்டு மற்றும் சுற்றுலா மேம்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு உதவிகளை வழங்கத் தயார் என அறிவித்துள்ளது.

இது தொடர்பில் இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் டேவிட் பைன் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

நலிந்த ஜயதிஸ்ஸ

நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் அண்மையில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸவை சந்தித்த போது இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நியூசிலாந்தின் முதலீடுகளை அதிகரிக்கவும், இலங்கைக்கு வருகை தரும் நியூசிலாந்து சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் உதவிகள் வழங்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version