Home சினிமா பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை தழுவிய DD Next Level.. வசூல் விவரம் இதோ

பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை தழுவிய DD Next Level.. வசூல் விவரம் இதோ

0

DD Next Level

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி தற்போது கதாநாயகனாக கலக்கிக்கொண்டு இருக்கிறார் சந்தானம். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் DD Next Level.

இப்படத்தை இயக்குநர் எஸ். பிரேம் ஆனந்த் இயக்க, நடிகர் ஆர்யா தயாரித்திருந்தார். ஹாரர் காமெடி கதைக்களத்தில் சந்தானம் நடிக்கிறார் என்றால் கண்டிப்பாக படம் தரமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றமே அவர்களுக்கு மிஞ்சியது.

வசூலில் தோல்வி

முதல் நாளில் இருந்தே வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பின்னடைவை சந்தித்து வரும் DD Next Level திரைப்படம் 6 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, சந்தானத்தின் DD Next Level படம் உலகளவில் 6 நாட்களில் ரூ. 12 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. இது மிகவும் குறைவான வசூல் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: https://cineulagam.com/article/dd-next-level-failed-at-box-office-collection-1747887885

NO COMMENTS

Exit mobile version