Home சினிமா பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா

0

DD Next Level

நடிகர் சந்தானம் தொடர்ந்து ஹாரர் காமெடி கதைக்களத்தில் நடித்து வருகிறார். தில்லுக்கு துட்டு படத்தில் ஆரம்பித்த இந்த பயணம் தற்போது DD Next Level படம் வரை வந்துள்ளது.

இயக்குநர் எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் உருவான இப்படத்தில் சந்தானத்துடன் இணைந்து கீத்திகா டிவாரி, கவுதம் மேனன், மொட்டை ராஜேந்திரன், செல்வராகவன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் தனி எதிர்பார்ப்பு உண்டு.

2 நாட்களில் மாமன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

இதனால் DD Next Level திரைப்படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். ஆனால், படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை, ஏமாற்றத்தை மட்டுமே கொடுத்துள்ளது. இதனால் வசூலும் குறைய துவங்கியது.

வசூல் விவரம்

இந்த நிலையில், DD Next Level திரைப்படம் 2 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் ரூ. 5.5 கோடி மட்டுமே. இது மிகவும் குறைவான வசூல் என்றும், சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா என திரை வட்டாரத்தில் பேசிப்படுகிறது. 

NO COMMENTS

Exit mobile version