Home இலங்கை குற்றம் யாழில் காயங்களுடன் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

யாழில் காயங்களுடன் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

0

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில், காயங்களுடன் குடும்பஸ்தர் ஒருவரின்
சடலம் நேற்று (09) திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளது.

அல்லைப்பிட்டி, 3ஆம் வட்டாரம் பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய நபர் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

அந்தப் பகுதியில் புதிதாகக் கட்டப்படும் கட்டடம் ஒன்றின் அருகில் இருந்தே
சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகள்

சடலத்தில் அடிகாயங்கள் காணப்பட்ட நிலையில், சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக
யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள
நிலையில், யாழ்ப்பாணம் தடயவியல் பொலிஸாரும் சம்பவ இடத்துக்குச் சென்று
தடயவியல் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

Source: https://tamilwin.com/article/dead-body-found-in-jaffna-1725913041

NO COMMENTS

Exit mobile version